குடும்பத் தகராறு தீக்குளித்த மனைவி உடல் கருகி பலி கணவன் ஆபத்தான நிலையில் அனுமதி
குடும்பத் தகராறில் தீக்குளித்த மனைவி உடல் கருகிப்பலி கணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி சேலம் அடுத்த பனங்காடு ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தனபால் 42 கட்டிட தொழிலாளி இவரது மனைவி பிரியா 34 இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளடர் கணவன் மனைவியை அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது நேற்று இரவு 7:30 மணி அளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது அப்போது அவர்களின் மூன்று மகள்களும் அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று விட்டனர் வீட்டில் ஆண் குழந்தை மட்டுமே இருந்தது இரவு 8 மணி அளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த பிரியா வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை கண்ட தனபால் அவரைக் காப்பாற்ற சென்றார் இதில் இருவரும் உடல் கருகினர் இதனிடையே தனபாலின் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள் விரைந்து வந்து கதவை தட்டினர் ஆனால் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது திறக்க முடியவில்லை இதனை எடுத்து சூரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கும் கொண்டலாம்பட்டி போலீசார்க்கும் தகவல் தெரிவித்தன அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் வீட்டுக்குள் தனபாலும் பிரியாவும் உடல் கருகிய நிலையில் இருந்தனர் அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயர்ந்தார் தனபாலுக்கு சேலம் அரசு மருத்துவமனையின் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0