தேமுதிக சேலம் மாநகர்
சேலம் கேப்டன் இரண்டாவது ஆண்டு குருபூஜை முன்னிட்டும் நூறாவது வார அன்னதான நாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் கிச்சிப்பாளையம் பகுதியில் 500 பேருக்கு அன்னதானம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் குருபூஜை தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது கேப்டன் 2வது நினைவு தினத்தை முன்னிட்டும் தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கேப்டன் இரண்டாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் இந்நிலையில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதி சார்பாக 44 வது வார்டு பகுதியில் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டும் 100 வது வாரம் அன்னதானம் வழங்கும் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சேலம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குருபூஜை தினம் அனுஷ்டிக்கப்பட்டது சேலம் கிச்சிப்பாளையம் பகுதி சார்பாக 44வது வார்டு பகுதியில் நூறாவது வார அன்னதானம் அனுமன் நிகழ்ச்சி நடைபெற்றது சேலம் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சிக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் இடத்தில் அலங்கரிக்கப்பட்ட கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 500 பேருக்கு தக்காளி சாதம் லட்டு தண்ணீர் பாட்டில் உள்ளிட்வை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நாராயணன் சேலம் தெற்கு வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் தக்காளி ஆறுமுகம் பன்னீர்செல்வம் மாநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் வடிவேலு கிச்சிப்பாளையம் பகுதி அவைத்தலைவர் செல்வம் பகுதி துணைச் செயலாளர் முஸ்தபா 44வது வார்டு செயலாளர் கோபால் குகைப் பகுதி தியாகு ஹரி மற்றும் சங்கர் மணிகண்டன் மற்றும் மணி குகை பகுதி சண்முகம் சத்தியமூர்த்தி பூபாலன் செவ்வாய்பேட்டை இன்பா உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0