சேலம் சரகத்தில் 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் மாநிலம் முழுவதும் 88 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி பொறுப்பில் உள்ள வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார் இதில் சேலம் போலீஸ் சரகத்தில் 9 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர் சேலம் மாவட்டம் மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ் சேலம் ஓ சி ஐ யூ பிரிவிற்கும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் மேட்டூருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும் ராணிப்பேட்டை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி டிஎஸ்பி ஆகவும் அங்கு பணியாற்றிய டிஎஸ்பி முரளி திருப்பத்தூர் டிஎஸ்பி ஆகவும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் டிஎஸ்பி ஆகும் மாற்றப்பட்டுள்ளனர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி செல்வம் சென்னை தலைமை இடத்திற்கு காத்திருப்போர் பட்டியலுக்கும் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு 2 டிஎஸ்பி சரவணகுமாரன் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும் சேலம் மாவட்டம் மதுவிலக்கு டிஎஸ்பி மகாவிஷ்ணு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0