அதிமுக பொதுக்கூட்டம்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயண பொதுக்கூட்டம் நடந்தது அப்போது அவர் பேசும்போது சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை முதல் முறையாக இங்கு எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ளேன் விலையும் பயிர் மொழியிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இங்கு கூடி இருக்கும் கூட்டமே முழு வெற்றியை தரும் என்பதற்கு சாட்சி இங்கு மட்டும் அல்ல 234 தொகுதிகளில் அதிகப்படியான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை பாதுகாக்க நிரந்தர டிஜிபி நியமிக்க வேண்டும் இந்த அரசு வழங்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிப்பதில் ஏன் தயக்கம் அதிமுக கூட்டணி எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் கிராமத்தில் இருந்து வந்த எடப்பாடி யார் என்ன செய்ய முடியும் என நினைக்கிறார்கள் வலுவான கூட்டணியை அமைப்போம் 234 தொகுதிகளில் அதிக தொகுதிகளில் அதிமுக கூட்டணியுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் அந்த ஆட்சி அமைந்ததும் 100 100 நாள் வேலை திட்டத்தை தற்போது மத்திய அரசு 125 நாளாக உயர்த்தி உள்ளது அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 150 நாளாக உயர்த்துவேன் இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார் இந்த கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செம்மலை, பரஞ்சோதி, சரோஜா, விஜயலட்சுமி பழனிசாமி, வளர்மதி, கழக அமைப்பு செயலாளர்கள் திருவேற்காடு சீனிவாசன், சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, ஆர்.மணி, பாலசுப்ரமணியன், சுந்தரராஜன், சித்ரா, ஜெயசங்கரன், நல்லதம்பி, முன்னாள் கொரடா அரியலூர் ராஜேந்திரன், ஒன்றியக்க செயலாளர்கள் ஜெகநாதன், பாலசந்திரன், வெங்கடேஷ், செல்வபிரகாஷ், வருதராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Jan 5, 2026 - 08:32
Jan 5, 2026 - 08:40
 8

2.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0